ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர் பெரியார் நகரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 1 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. மாவட்டத்தில் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது.ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மழை அளவு சற்று அதிகமாக காணப்பட்டது. இந்த திடீர் மழை யால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதேபோல், திருப்பத்தூர் பகுதியில் மழை அதிகமாக காணப்பட்டது. இடி, மின்னலுடன் மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை, ஒரு மணி நேரம் விடா மல் பெய்தது. இதனால் தாழ் வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் தீவுபோல் காணப்பட்டது. அனைத்து சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் சேரும், சகதியுமாக உள்ளே புகுந்தது.

மழைக் காலங்களில் திருப்பத் தூர் நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் பெரியார் நகர் பகுதியை சூழ்ந்துவிடுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் அதிக சிரமத்துக்குள்ளாகின்றனர். நேற்றும் பல வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பலர் வீட்டைவிட்டு வெளியேறினர்.

இதுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘மழை காலம் வரும்போதெல்லாம் பெரியார் நகரில் மழைநீர் சூழ்ந்துவிடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் திடம் பல முறை புகார் செய்து விட்டோம். 20 ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE