உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவுகள்: 3 மாதங்களில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிடப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலைப் பணியில் 417 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் நேற்று எழுத்துத்தேர்வு நடந்தது.

முதல் தாளான வேளாண்மை தேர்வு காலையிலும், 2-வது தாளான பொது அறிவு தேர்வு பிற் பகலும் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 3,200-க்கும் மேற்பட் டோர் தேர்வெழுதினர்.

சென்னையில் பழைய வண் ணாரப்பேட்டையில் உள்ள பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப்பள்ளி மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், “உதவி வேளாண் அலுவலர் தேர்வை முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. எழுத்துத் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE