லட்சியத்தை அடைய முயற்சியை கைவிடாதீர்: பட்டமளிப்பு விழாவில் அப்துல் கலாம் அறிவுரை

லட்சியத்தை அடையும் வரை முயற்சிகளை கைவிடக்கூடாது என்று சென்னை புதுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:

ஒருசில தனித்துவமான குணாதிசயங்கள் கொண்டவர் களே வாழ்க்கையில் சாதனை படைக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2 கோடி இளைஞர் களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி உள்ளேன். உங்கள் லட்சியத்தை அடையும்வரை முயற்சிகளை கைவிடக் கூடாது என்பதுதான் இன்றைய இளைஞர் களுக்கு நான் கூறும் அறிவுரை.

வெற்றியைக் கொண்டாடு றோமோ இல்லையோ, தோல் வியை கண்டிப்பாக கொண்டாட வேண்டும். ஏனென்றால், தோல்வி தான் அடுத்தமுறை தோற்கக் கூடாது என்ற நம்பிக்கையையும் வலுவையும் தரும். நமது இலக்கு நோக்கிச் செல்வதற்கான ஊக்கத் தையும் தரும்.இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.

கல்லூரி தலைவர் யு.முகமது கலிலுல்லா தலைமையில் விழா நடந்தது. தாளாளர் ஏ.முகமது அஷ்ரப் முன்னிலை வகித்தார். முதல்வர் எஸ்.அப்துல் மாலிக் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, கவிஞர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் உட்பட 423 பேர் பட்டம் பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE