தனி அமைச்சகம் அமைக்க கோரி டெல்லியில் இன்று நாடாளுமன்றம் நோக்கி மீனவர்கள் பேரணி

தமிழகம் உட்பட 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2014-ல் மத்திய அரசிடம் அளிக் கப்பட்ட மீனாகுமாரி அறிக்கையின் பரிந்துரைகள் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது.

இந்தியாவின் ஆழ்கடல் பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் மீன்பிடிக்க உரிமம் வழங்கும் மீனாகுமாரி குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க புதிய உரிமங்கள் வழங்கக் கூடாது.

மீனாகுமாரியின் பரிந்துரை களை அமல்படுத்தினால் இந்தியா வின் 13 கடற்கரை மாநில மீனவர் கள், 2 லட்சம் மீன்பிடிப் படகுகள், 12 கடல் மைல்களுக்குள்ளேயே, மீன் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது இந்திய கடல் பகுதியில் மோதலை உருவாக்கும்.

இந்திய மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்குவதன் மூலம் மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும். மீனவர் நலனுக்கு என தனி அமைச்சகத்தை பிரதமர் ஏற்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி தேசிய மீனவர் பேரவை சார்பில் தமிழக மீனவர்கள் உட்பட 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்துகொள்ளும் பேரணி, ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற உள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE