பொறியியல் படிப்புக்கு 2.4 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் மும்முரம்

இந்த ஆண்டு பொறியியல் படிப் புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப் படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன.

பிளஸ் டூ தேர்வு மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பில் சேரவே விரும்புகிறார்கள்.

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் எத்தனை மதிப்பெண் கிடைக்கும், கட் ஆப் மார்க் எவ்வளவு வரும் என்று பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும், அவர் களின் பெற்றோரும் இப் போதே கணக்கு போடத் தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்களில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். இந்த கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம் பக் கட்டப் பணிகள் பல்கலைக் கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது.

ஆனால், பெரும்பான்மையான கிராமப்புற மாணவர்களின் நல னைக் கருத்தில்கொண்டு ஏற் கெனவே நடைமுறையில் இருந்து வரும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப முறையை பின்பற்றுமாறு அரசு அறி வுறுத்தியது. எனவே, விண்ணப்பிக் கும் முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பிளஸ் டூ தேர்வு முடிவு மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவு வெளியாவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்