தன்னாட்சி கல்லூரிகளின் செயல்பாடுகளை ஆராய குழு நியமனம்: யுஜிசி தகவல்

தன்னாட்சி கல்லூரிகளின் செயல்பாடுகளை ஆராய தனியே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக யுஜிசி துணைத்தலைவர் எச்.தேவராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் சார்பில் “பல்கலைக்கழகங்கள், தொழில் நிறுவனங்கள், சமுதாயம் இடையே அறிவு பரிமாற்றம்” தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் நேற்று தொடங்கியது.

இந்த கருத்தரங்கில் பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) துணைத்தலைவர் பேராசிரியர் எச்.தேவராஜ் சிறப்புரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:-

கல்வி நிறுவனங்களி்ன் பாது காவலனாக திகழ்பவை பல்கலைக் கழங்கள்தான். எனவே, பல்கலைக் கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், தகுதியானவர் கள் துணைவேந்தர்களாக நியமிக் கப்பட வேண்டும்.

அதேபோன்று பள்ளியிலும் கல்லூரியிலும் கல்வித்தரம் சிறப் பாக இருக்க வேண்டுமானால் தகுதியான நபர்கள் ஆசிரியர் களாக நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் அறிவை தொடர்ந்து மேம்படுத்தி வர வேண்டும்.

இவ்வாறு தேவராஜ் கூறினார்.

கருத்தரங்க தொடக்கவிழா முடிந்த பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

உலக அளவில் சிறந்த 200 பல்கலைக்கழங்களின் பட்டிய லில் இந்திய பல்கலைக்கழகங் களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற இலக் குடன் யுஜிசி பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் 450 தன்னாட்சி கல்லூரிகள் உள்ளன.

அவற்றில் 155 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. இந்த ஆண்டு தன்னாட்சி அந்தஸ்து கோரி 20 தமிழக கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE