கல்யாண் ஜுவல்லர்ஸ் சென்னையில் நாளை தொடக்கம்: அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு பங்கேற்பு

சென்னை தி.நகரில் உள்ள சர் தியாகராயா சாலையில் ரூ.200 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட் டுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கிளை நாளை (ஏப்ரல் 17) தொடங்கப்படவுள்ளது. இந்த விழாவில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இது தொடர்பாக கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி.எஸ்.கல்யாணராமன் கூறியதாவது:

இந்தியாவில் கல்யாண் ஜுவல் லர்ஸ் மொத்தம் 77 இடங்களில் கிளைகளைத் திறந்துள்ளது. சென்னை தி.நகரில் 78-வது கிளையை நாளை தொடங்க வுள்ளோம். இந்த விழாவில் நடிகர் கள் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு, நாகார்ஜுனா, சிவராஜ் குமார், மஞ்சுவாரியர், விக்ரம் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைக்கவுள்ளனர்.

ரூ.200 கோடி முதலீட்டில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த புதிய விற்பனை மையம் தொடங்கப்படுகிறது. 5 லட்சத்துக் கும் மேற்பட்ட பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகள் கொண்ட நகைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 600 கிலோ நகைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவில் வாகன நிறுத் தும் வசதியை ஏற்படுத்தியுள் ளோம். குழந்தைகள் விளையாடி மகிழ தனிப்பகுதி உருவாக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 14 இடங்களில் கல்யாண் ஜுவல்லரி கிளைகள் செயல்படுகின்றன. இவை தவிர ரூ.300 கோடி முதலீட் டில் குரோம்பேட்டை, அடையாறு, வேளச்சேரி மற்றும் அண்ணாநகர் ஆகிய 4 இடங்களில் தலா 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய கிளைகளை தொடங்கவுள் ளோம். விரிவாக்கத் திட்டங்களின் மூலம் 2015-16-ம் நிதியாண்டில் ரூ.13,000 கோடிக்கு வளர்ச்சி இலக்கை நிர்ணயித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக நடிகரும், விளம்பர தூதருமான பிரபு கூறும் போது, ‘‘அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் புதுப்புது வடிவமைப்பு களில் இங்கு தங்க நகைகள் கிடைக் கின்றன. தமிழகம், கேரளம், ஆந் திரம் என அந்தந்த மாநிலங்களின் பாரம்பரிய நகைகளை இந்த விற்பனை மையத்தில் வாங்கலாம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE