11 அவசரச் சட்டங்கள்தான் பாஜக அரசின் சாதனை: சென்னையில் நடைபெற்ற தமாகா பொதுக்குழுவில் ஜி.கே.வாசன் ஆவேசம்

11 அவசரச் சட்டங்கள்தான் பாஜக அரசின் சாதனை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆவேசமாக புகார் தெரிவித்தார்.

தமாகா பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜி.கே.வாசன் பேசியதாவது:

தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதால் காங்கிரஸில் இருந்து வெளியேறி தமாகாவை தொடங்கியுள்ளோம். மூப்பனார் காட்டிய பாதையில் காமராஜர் ஆட்சி அமைப்பதே நமது லட்சியம். கட்சி தொடங்கிய 6 மாதங்களில் 45 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது மகத்தான சாதனை.

நாகரிக மான செயல்பாட்டுடன், ஆரவாரம் இல்லாத அரசியலை விரும்பும் இளைஞர்கள் தமாகாவில் இணைந்துள்ளனர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை.

பாஜக ஆட்சியில் மக்களிடையே அச்சமும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுகிறது. ‘சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்க வேண் டும், கருத்தடையை கட்டாயமாக்க வேண்டும், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு கோயில் கட்ட வேண்டும்’ என்றெல்லாம் அதிகாரத்துக்கு அருகில் இருப்ப வர்களே பேசுகிறார்கள். இதை கண் டிக்காமல் மத்திய அரசு மவுனமாக இருக்கிறது. 11 மாதங்களில் 11 அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்ததுதான் பாஜக அரசின் சாதனை. வாய்ச்சொல் வீரர்கள் என் பதை பாஜகவினர் நிரூபித்து உள்ளனர்.

தமிழக அரசின் செயல்பாடுகளில் தயக்கமும், தடுமாற்றமும் தென்படு கிறது. அறிவிக்கப்பட்ட திட்டங் கள் பாதியில் நிற்கின்றன. இத ற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.

2016 சட்டப்பேரவைத் தேர்த லுக்கு 365 நாட்களே உள்ளன. இத் தேர்தலில் தமாகாவை முதன்மைக் கட்சியாக நிரூபிக்க வேண்டும். அதற்காக இப்போதிருந்தே முழு மூச்சுடன் உழைக்க தொண்டர் கள் தயாராக வேண்டும். குக்கிராமங் களிலும் தமாகா கொடி பறக்க வேண்டும். இவ்வாறு வாசன் கூறினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை தமாகா பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னையில் நேற்று நடைபெற்ற தமாகா முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பூரண மதுவிலக்கு குறித்து தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த நவம்பர் 28-ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியைத் தொடங்கினார். கடந்த டிசம்பர் 11 முதல் மார்ச் 31 வரை உறுப்பினர் சேர்க்கை நடந்தது. இந்நிலையில், தமாகாவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரம் வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

பகல் 12.15 மணிக்கு பொதுக்குழு தொடங்கியதும் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் நடத்தினார். பின்னர், தமாகா பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

குடும்பங்கள் சீரழியவும், குற்றங்கள் பெருகவும் மதுவே காரணம். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு மே 31-ம் தேதிக்குள் முடிவு எடுக்காவிட்டால் தமாகா சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE