விழுப்புரத்தில் 1800 வழக்குகள் ஒரே நாளில் பதிவு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்டாமிங் ஆபரேஷன் திட்டத்தில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு ஒரே நாளில் 1,800 வழக்குகளை பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களைத் தடுக்கும் விதத்தில் போலீஸார் ஸ்டாமிங் ஆபரேஷன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். எஸ்பி நரேந்திர நாயர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்குத் தொடங்கி நேற்று காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த கண்காணிப்பில் 1,800 வழக்குகள் வரை பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE