முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜனின் மக்கள் விடுதலை கட்சி வரும் 14-ல் தமாகாவுடன் இணைக்கப்படும்: ஜி.கே.வாசன் தகவல்

By செய்திப்பிரிவு

முன்னாள் எம்எல்ஏ முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலை கட்சி தமாகாவுடன் இணைகிறது. இதற்கான இணைப்பு விழா வரும் 14-ம் தேதி மதுரை புதூரில் நடைபெறும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

மதுரையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமாகாவில் 50 லட்சம் உறுப்பினர் களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பொதுக்குழு, செயற்குழு கூடுவது, மாநிலத்தில் தொடங்கி கிராமம் வரை அனைத்து நிர்வாகிகள் நியமனமும் மே மாதத்தில் முடிந்துவிடும். அடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தொடங்குவோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருப்பதால் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அரசின் தலையீடு இல்லாமல் விசாரணை நடைபெற வேண்டும். உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதிகாரி குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

வீடுகளில் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி பெற ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே கடும் குடிநீர் பிரச்சினை உள்ள நிலையில் மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அரசாணை உடனே திரும்பப் பெறப்பட வேண்டும்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள சத்துணவு அமைப்பாளர் களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும்.

மீனவர் பிரச்சினை குறித்து இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னர், கடுமையான போக்கை இலங்கை அரசு கைவிட வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், படகுகள் சேதப்படுத்து வது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தால்தான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை பிறக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்