என்எல்சி பேருந்துகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெய்வேலி என்எல்சி பேருந்துகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்எல்சி நிறுவனம் சார்பில் தொழிலாளர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் என்எல்சி பகுதியில் மட்டும் இயக்கப்படும். கட்டணமும் குறைவாக இருக்கும்.

இதை நிர்வகிக்க தனித்துறை அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி பேருந்துகளை தனியார் மயமாக்கமுடிவு செய்திருப்பதாக கூறப்படு கிறது. நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து தொமுச, அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச துணைத்தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் சுப்ரமணியன், அண்ணா தொழிற் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச தலைவர் திருமாவளவன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தேவானந்தன் ஆகியோர் கோரிக் கையை விளக்கி பேசினர்.

ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி பழனிவேல், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனுஷ் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE