சித்தூர் நோக்கி ஊர்வலம்: வேலூரில் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைதாகி விடுதலை

By செய்திப்பிரிவு

திருப்பதியில் 20 தமிழக தொழிலாளர்கள் கடந்த 7-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற் றுகையிடும் போராட்டம் நடை பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.

அதன்படி, வேலூரில் இருந்து வைகோ தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று ஊர்வலமாகச் சென்றனர். முன்னெச்சரிக்கையாக இவர் களை கைது செய்ய போலீஸார் காத்திருந்தனர். அப்போது, போலீ ஸாருக்கும் மதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கடும் வெயில் காரண மாக வைகோவுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவர் சாலையோரம் இருந்த மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர் களிடம் வைகோ கூறும்போது, ‘‘இறந்தவர்களின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். தமிழர்கள் சுடப்பட்ட சம்பவத்தை ஆந்திர அரசு நியாயப் படுத்துவதை ஏற்க முடியாது. இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று அமைச்சர் கூறுவதை கண்டிக்கிறேன். இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், நியாயமான விசாரணை நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர சிறைகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

வைகோ உள்ளிட்ட மதிமுக வினர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE