மீன்பிடி தடை காலம்: 1.65 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 உதவித் தொகை - ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய அரசு உத்தரவுப்படி கடலில் மீன் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதி வரை 45 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச் சேரி மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவ குடும்பங் களுக்கு வழங்கப்படும் ரூ.2,000 உதவித் தொகையை வழங்க தமிழக அரசு நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

1.65 லட்சம் மீனவ குடும்பங் களுக்கு ரூ.2000 வீதம் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவ குடும்பங்களின் எண் ணிக்கை, கடந்தாண்டு 1,49,855 என இருந்தது. இந்தாண்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மீனவ குடும்பங்களுக்கு தற்செயல் செல வினமாக மொத்தம் 4,95,000 ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE