கடந்த ஆண்டைவிட அதிகரித்து வரும் வெயில்: பல மாவட்டங்களில் மக்கள் பரிதவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் வெப்பம் பல மாவட்டங்களில் பதிவாகி வருகிறது.

வேலூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பதிவான 106.8 டிகிரி பாரன்ஹீட்தான் அந்த மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலையாகும். ஆனால் இந்த ஆண்டு முதல் வாரத்திலேயே 106 டிகிரியை தொட்டு விட்டது. அதேபோன்று திருச்சியிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி 107 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதியே 106.8 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இதே நிலை தான் உள்ளது.

காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சமீபத்தில் மழை பெய்த காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் இன்னும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடவில்லை. ஆனால், ஏப்ரல் மாத இறுதிக்குள் அந்த மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்து விடும் என தெரிகிறது.சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சராசரியாக 100 அல்லது 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகும் நிலை உள்ளது.

வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ (கத்திரி வெயில்) காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் இப்படி சுட்டெரிப்பதால், வரக்கூடிய மே, ஜூன் மாதங்களில் வெயிலை எப்படி சமாளிப்பது என்று மக்கள் திணறி வருகின்றனர். கோடைக் காலம் ஆரம்பித்து விட்டது என்பதற்கு அடையாளமாக இளநீர் கடைகளும், தர்பூசணி, கரும்புச் சாறு கடைகளும் சாலையோரங்களில் அதிகரித்து வருவதை காணலாம்.

அவதிக்குள்ளாகும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

வட இந்தியாவில் பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்திலேயே அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடத்தப்படும். தமிழகத்திலும் சில சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்த நடைமுறையே பின்பற்றப்படுவதால் மாணவர்கள் வெயிலில் அவதிப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

வட இந்தியாவில் பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்திலேயே அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடத்தப்படும். தமிழகத்திலும் சில சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்த நடைமுறையே பின்பற்றப்படுவதால் மாணவர்கள் வெயிலில் அவதிப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவரது தாய் ராஜ மீனாட்சி கூறும்போது, “இது என்ன விநோதமான பழக்கம் என்று தெரியவில்லை. ஏப்ரல் மாதத்தில் வெயில் அதிகமாகும் காரணத்தால் மற்ற பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை இருக்கும்போது சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்கின்றன. இதனால், மாணவர்களும் பய னடைய போவதில்லை. ஏனென்றால் ஜூன் மாதம் வரும்போது ஏப்ரல் மாதத்தில் நடத்திய பாடங்கள் மறந்து போயிருக்கும்” என்றார்.

மற்றுமொரு சி.பி.எஸ்.இ பள்ளி மாணவியின் தாய் மரகத ருக்மணி கூறும்போது, “நாங்கள் மும்பை, போபால் நகரங்களில் வசித்த போது இந்த நடைமுறை பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு எந்தப் பயனும் இல்லை. வெயில் காலத்தில் பிள்ளைகளால் முறையாக கவனிக்கவும் முடியவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE