திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி முதல் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: அனைத்து கிராமங்களிலும் மே 20 வரை நடக்கிறது

பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம், கடந்த மாதம் 31-ம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், சமூக நல அலுவலர் நந்திதா, முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி வரும் 8-ம் தேதி திருவள் ளூர் மாவட்டத்தில் தொடங்கு கிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த கணக் கெடுக்கும் பணி வரும் மே 20-ம் தேதி வரை நடைபெறும்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வள மைய ஆசிரியர் கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், சுய உதவிக் குழு வினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் இந்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் பள்ளிச் செல்லா குழந்தைகள் அனைவரும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம்- தாமனேரி, மீஞ்சூர் ஒன்றியம்- திருவெள்ளைவாயில் ஆகிய இடங்களில் நடத்தப்படும் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் அமைக்கப்பட உள்ள 30 நீண்ட கால மற்றும் 20 குறுகிய கால சிறப்புப் பயிற்சி மையங்களில் ஜூன் முதல் வாரத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

அதேபோல், கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், பாதுகாப்பு மையங்களில் சேர்க்கப்படுவர். இவ்வாறு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள், நீண்ட கால, குறுகிய கால பயிற்சி மையங்கள், பகல் நேர பாதுகாப்பு மையங்களில் சேர்க்கப்பட உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், தமிழக அரசின் மாணவர்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் கிடைப் பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அனைவருக் கும் கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE