ஆந்திர அரசை கலைக்க வேண்டும்: திருமாவளவன்

காரைக்காலில் உள்ள இந்திய எண்ணெய் எரிவாயு கழகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கக் கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது கண்டிக்கத்தக்கது. இது, இரு மாநில மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும்.

20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர அரசைக் கலைத்து விட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

காரைக்கால் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தில் ஒப் பந்த அடிப்படையில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்கள், உதவியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக் கூலி முறையைக் கைவிட்டு, தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE