ஜெயலலிதா வழக்கில் அவசரம் காட்டப்படுவது ஏன்?- கருணாநிதி கேள்வி

திமுக தலைவர் கருணா நிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது தொடர்பாக 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முடிவு செய்யும் என்று 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிக்கப்பட்ட மறுநாளே, 3 நீதிபதிகள் அமர்வு 21-ம் தேதி விசாரிக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்ட பல வழக்கு களிலே காட்டப்படாத அவசரம், இந்த வழக்கில் மட்டும் காட்டப் படுவதன் காரணம் என்ன? ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஓராண்டு கடந்தும், இன்னும் அந்த அமர்வு அமைக்கப்படவில்லை. அதே போல சுமார் 30-க்கும் மேலான வழக்குகளில் பெரிய அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, பல மாதங் கள் ஆகியும் அமர்வு அமைக்கப் படாமல் அந்த வழக்குகள் எல்லாம் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

ஆனால், ஜெயலலிதா சம்பந்தப் பட்ட வழக்கில் மட்டும், அறிவிக்கப் பட்ட 24 மணி நேரத்திலேயே மின்னல் வேகத்தில் பெரிய அமர்வு 21-ம் தேதி விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்தப் பெரிய அமர்வு அமைக்கப்படுவது சம்பந்தமாக, முக்கியமான ஒரு வரே அவசர அவசரமாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத் துக்கு நேரடியாகச் சென்று ஏற்பாடு களைச் செய்தார் என்றும், ஜெய லலிதா வழக்கிலே இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டப்படுவது ஏன்? 3 நீதிபதிகள் யார் என்று தெரியாத நேரத்தில், அமர்வு 21-ம் தேதி நடக்கும் என எவ்வாறு அறி விக்கலாம்? இந்தச் சம்பவங்கள் எல்லாம் குடியரசுத் தலைவருக் கும், பிரதமருக்கும் தெரிந்துதான் நடக்கின்றனவா? என்றெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியிலே மிகப் பெரிதாக விவாதிக்கப்படு கிறதாம்.

செங்கல்பட்டு ரயில் நிலையத் தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 டன் நெல் மூட்டைகள் மழை யில் நனைந்து வீணாகியுள்ளன. இதற்குக் காரணமான அதிகாரி கள், அமைச்சர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் மூட்டைகளை திறந்தவெளி யிலே வைக்கச் சொன்னவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE