தமிழக பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களுக்கு நிதி உதவி நிறுத்தம்

By அ.அருள்தாசன்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் 900-க்கும் மேற்பட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங் களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிதி உதவி வழங்கப்படவில்லை. இந்த மன்றங்களின் செயல்பாடுகள் முடங்கியிருக்கின்றன.

நுகர்வோர் விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக பள்ளி, கல்லூரிகளில் 500 குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மன்றங்களின் செயல்பாட்டுக்கும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கு வது, விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் 2006-2008-ம் ஆண்டுகளில் ஒவ்வொரு மன்றத் துக்கும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2009-ல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆக குறைக்கப்பட் டது. 2011-ம் ஆண்டிலிருந்து அத் தொகையும் வழங்கப்படவில்லை.

இதனால் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உலக உணவு தினம், தரநிர்ணய தினம், நுகர்வோர் பாது காப்பு தினம் உள்ளிட்ட பல்வேறு தினங்களிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க முடியவில்லை. நுகர்வோர் விழிப் புணர்வு பயணங்களை மாணவர் கள் மேற்கொள்ள முடியவில்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் டி.ஏ.பிரபாகர் கூறியதாவது:

`நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி ஒவ்வொரு மாநிலத் திலும் அந்தந்த மாநில உணவுத் துறை அமைச்சர் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு அமைக் கப்பட்டு செயல்பட வேண்டும். சிவில் சப்ளைஸ் ஆணையர் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாநில அளவில் கூட்டங்களை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆனால் 2012லேயே இந்த குழு காலாவதியாகிவிட்டது. பின்னர் புதிய குழு அமைக்கப்படவில்லை.

ரூ. 5 ஆயிரம் கோடி

மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நுகர்வோர் பாதுகாப்பு நிதி இருக்கிறது. அதை மாநில அரசுகள் கேட்டுப் பெற வேண்டும். அவ்வாறு பெற்றால் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் சிரமங்கள் இருக்காது. ஏற்கெனவே மத்திய அரசிடம் பெற்ற நிதியை முறையாக செலவிடவில்லை என்ற புகார்களும் இருக்கின்றன’ என்றார் அவர்.

பள்ளிகளில் செயல்படும் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்றம் போன்ற அமைப்புகளுக்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. அதுபோல் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கும் தொடர்ந்து நிதியுதவி அளித்து நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கை ஆகும்.

22 நீதிபதி பணியிடங்கள் காலி

தமிழகத்தில் தற்போது 22 மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நுகர்வோர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்த குறைதீர் மன்றங்களையே அணுகுகிறார்கள். ஆனால் நீதிபதிகளே இல்லாவிட்டால் நுகர்வோருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என்று நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்