ஐஓபி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டம்: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

“பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” என்ற திட்டத்தின்கீழ் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமும் (எல்ஐசி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (ஐஓபி) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இது குறித்து எல்ஐசி மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள ஐஓபி தலைமை அலுவலகத்தில் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துகொள் ளப்பட்டது. புதிய திட்டத்தின்கீழ் ஐஓபி-யில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக் கையாளரும் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டு தொகை பெறலாம். சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 55 வயதை அடையும் வரை இந்த ஆயுள் காப்பீடு தொடரும்.

இந்த காப்பீட்டு திட்டத்துக்கான ஆண்டு பிரீமியத் தொகை ரூ.330 (சேவை வரி நீங்கலாக). வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளவும், தங்கள் கணக்கிலிருந்து ரூ.330 பிடித்தம் செய்துகொள்ளவும் ஓர் ஒப்புதல் படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும்.

இந்த ஒப்புதல் படிவம் இம்மாதம் 15-ம் தேதியிலிருந்து வங்கியில் பெற்றுக்கொள்ளப்படும். ஆகஸ்ட் 31, 2015 வரை தங்களை இணைத்துக்கொள்ளலாம். காப்பீட்டு காலமானது ஜூன் 1, 2015 முதல் (அல்லது வாடிக்கையாளர்கள் பிரீமியத் தொகையை பிடித்தம் செய்து கொள்ள ஒப்புதல் படிவத்தை வங்கியில் கொடுக்கும் காலத் திலிருந்து) ஆரம்பித்து மே 31,2016-ல் முடிவடையும்.

இத்திட்டத்தில் சேரும் வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி ரூ.330 பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE