ஜிப்மர் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி இன்று ஆர்ப்பாட்டம்

ஜிப்மர் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கேட்டு இன்று (ஏப்.6) காலை 3 மணி நேர போராட்டம் நடக்க உள்ளது. ஜிப்மர் பாதுகாப்புக் குழு, அனைத்துக் கட்சிக் கூட்டம் குழுத் தலைவர் டி.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அவர் கூறும்போது:

புதுச்சேரி ஜிப்மரில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் 850 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலி ஊழியர்களின் 2011-12-ம் ஆண்டு பிஎப் நிதித் தொகை ரூ.3.54 கோடியை ஊழியர்கள் கணக்கில் உடனே வரவு வைக்க வேண்டும்.

ஜிப்மரில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், முறைகேடான நியமனங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து ஓய்வூதியம் தர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 6.4.2015 (இன்று) காலை மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் தற்காலிக ஊழியர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE