தொழிலாளி எரித்து கொலை: தம்பதி உட்பட 5 பேருக்கு ஆயுள் சிறை

மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் குமார் (19). கட்டிடத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி கல்யாணிக்கும் இடையே தொடர்பு இருந்தது. இதனால் குமாரை கணேசன் கண்டித்தார். அதன்பிறகும் இருவர் இடையே தொடர்பு நீடித்தது.

இந்நிலையில் 28.9.2009-ல் ஊமச்சிக் குளம் சிறுதூர் கண்மாய்க்குள் குமார் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கணேசன், கல்யாணி, துரைப்பாண்டி, மணி, அழகர்சாமி ஆகி யோரை ஊமச்சிக்குளம் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் சிம்கார்டு வாங்கு வதற்காக கல்யாணியை வைத்து ஆட்டோவில் குமாரை அழைத்துவந்து எரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்கு, மதுரை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின், கணேசன், அவரது மனைவி கல்யாணி, கூட்டாளிகள் துரைப்பாண்டி, மணி, அழகர்சாமி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.7,500 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.சீனி வாசன் நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE