மீனவர்கள் நலனுக்கு எதிரான மீனாகுமாரி குழு பரிந்துரைகளை அமல்படுத்த இளங்கோவன் எதிர்ப்பு

மீனவர் நலன்களுக்கு எதிராக உள்ள மீனாகுமாரி குழுவின் பரிந் துரைகளை அமல்படுத்தக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியு ள்ளார்.

இதுகுறித்து இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐஏஎஸ் அதிகாரி மீனாகுமாரி குழுவின் அறிக்கை, மீன்பிடித் தொழிலை பாரம்பரியமாக, வாழ்வாதாரமாகக் கொண் டுள்ள லட்சக்கணக்கான மீனவர் களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் வகையில் அமைந் துள்ளது.

இதை எதிர்த்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 3 ஆயிரத் துக்கும் அதிகமான மீனவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி யுள்ளனர்.

இதில் 3 பாதிரியார்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது அப்பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை திரும்பப் பெறா விட்டால் தென் மாவட்டங்களில் கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

மீனாகுமாரி குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என்ற மீனவர்களின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவேண்டும். மீனவர்களுடன் பேசி, ஆழ் கடலில் எத்தகைய மீன்பிடி முறையை கையாளலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும் அதுவரை மீனவர் களை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE