காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரியத்தின் 43 குடியிருப்புகளுக்கு சீல் வைப்பு: விதிமீறல் புகாரின் பேரில் அரசு நடவடிக்கை

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத் துக்கு பின்னால் உள்ள 43 அரசு குடியிருப்புகளுக்கு வேலூர் மண்டல வீட்டுவசதி வாரிய பிரிவு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப் பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை உள் வாடகைக்கு விட்டிருப்பது மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அரசு குடியிருப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வருவது

உள்ளிட்ட புகார்களின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அரசுத் துறைகளில் பணிபுரி யும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, அந்தந்த மாவட் டங்களில் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதில், அரசுப் பணி யாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பணியாளர் களுக்காக வழங்கப்பட்டுள்ள குடி யிருப்புகளை சிலர் தனியாருக்கு உள் வாடகைக்கு விடுவதாகவும் அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் சிலர் தொடர்ந்து அரசு

குடியிருப்பில் வசித்து வருவதாக வும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு புகார்கள் வந்தன. பணியிட மாற்றத்துக்கு பிறகு வேறு பகுதியில் குடியிருப்பை பெற்ற பிறகும், இங்கு வழங்கப்பட்ட குடியிருப்பை சிலர் பயன் படுத்துவதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து, வீட்டு வசதி வாரியத்தினர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு குடியி ருப்புகளில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில், மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் பின்னால் அமைந்துள்ள 43 அரசு குடியிருப்பு களுக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் கூறிய தாவது: சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அரசு குடியிருப்புகளை காலி செய்யுமாறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் வழங் கியது. ஆனால், தொடர்ந்து குடியிருப்பில் வசித்து வந்ததால், வீட்டு வசதி வாரியத்தின் வேலூர் மண்டல பிரிவின் கண்காணிப் பாளர் வேலுசந்திரன் உத்தர வின் பேரில், காஞ்சிபுரம் உதவி வருவாய் அலுவலர் உதயகுமார் முன்னிலையில் 43 அரசு குடியிருப் புகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட குடியிருப்பு கள் பயன்பாட்டுக்கு உகந்த வகை யில் பாதுகாப்பாக உள்ளனவா என்பது போன்ற ஆய்வுகள் செய்யப்படும். தேவையெனில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் தகுதி வாய்ந்த அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE