மானிய விலையில் ஆவின் பால் வழங்காதது ஏன்? - பேரவையில் முதல்வர் விளக்கம்

ஆவின் பால் வாங்குவோரில் 30 சதவீதம்கூட ஏழைகள் இல்லை. இந்நிலையில் மானிய விலையில் ஏன் பால் வழங்கவேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பால்விலை உயர்வு குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் அளித்த பதிலுரையில் கூறியதாவது:

நாளொன்றுக்கு ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் 11.50 லட்சம் லிட்டர் சென்னை யிலும், 9.91 லட்சம் லிட்டர் பிற மாவட்டங்களிலும் விற்கப்படுகிறது. இதில் குறைந்த விலையில் பால் வாங்கி பயன் பெறும் அட்டைதாரர்கள் சென்னையில் 7 லட்சமும் , பிற மாவட்டங்களில் ஒரு லட்சமும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி யாற்றுபவர்கள். இதில் 30 சதவீதம் கூட ஏழைகள் இல்லை. இதற்காக மானிய விலையில் விற்று ஆவின் நஷ்ட பட வேண்டுமா?

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 187 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. இதில் 30 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே ஆவின் கொள்முதல் செய்கிறது. இந்நிலையில் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், அது தனியாரின் ஏகபோகத்துக்கு இட்டுச் செல்லும். இந்நிலையில் பால்விலையை நியாயமான அளவு கூட உயர்த்தாமல் ஆவின் எப்படி செயல்பட முடியும்?

வேலை வாய்ப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங் களில் பதிவு செய்துள்ள 45 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருப்பது போல சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தனியார் நிறுவனங் களில் பணிபுரிந்து கொண்டே அரசு வேலைக்காக பதிவு செய்திருப் பவர்கள். எல்லோருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவ தால் மட்டுமே வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்காக கடந்த ஆண்டு 1.5 லட்சம் இளைஞர் களுக்கு தொழில் பயிற்சி வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கவும், திறன் மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்