இலவச சட்ட உதவி கிடைப்பதி லும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்படுவ தால், சிறு வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயிரக்கணக்கான கைதி கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.
குற்றங்களில் 2 வகை இருக் கிறது. கொலை, கொள்ளை போன் றவை பெரிய குற்றங்கள். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 379-வது பிரிவின்படி ரூ.100-க்கு குறை வான பணத்தை திருடுவது, ஐபிசி 323-ன்படி சாதாரண காயம் ஏற் படுத்துவது, சென்னை நகர காவல் துறை சட்டம் 75-ன்படி சாலை போன்ற இடங்களில் சத்தமிடுவது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வது போன்றவை சிறிய குற்றங்கள்.
சிறு குற்றங்களுக்கு அபராதம் அல்லது சில மாத சிறை தண் டனை விதிக்கப்படும். சிறைவாசத் தின்போது, தண்டனையை ஒப்புக் கொள்ளும் கைதிகள் விடுவிக்கப் படுவார்கள்.
சிறு குற்றத்துக்காக சிறை யில் அடைக்கப்படும் ஏழை கைதிகள் தாங்கள் விடுதலை பெறுவதற்கு இலவச சட்ட உதவி முகாமை பெரிதும் நம்பியுள்ளனர். ஆதி திராவிடர், தாழ்த்தப்பட்டோர், பெண் கள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் இலவச சட்ட உதவி பெற வருமான உச்சவரம்பு எதுவும் கிடையாது. மற்ற வகுப் பினர் ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்குள் இருந்தால் இலவச சட்ட உதவி பெறலாம். நாட்டி லேயே தமிழகத்தில்தான் இலவச சட்ட உதவி மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்று கூறப் படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் பேரில், சிறைவாசிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் 2000-ல் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்றது. அப் போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட தால் சிறுகுற்றக் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். சைதாப் பேட்டை 9-வது சென்னைப் பெரு நகர மாஜிஸ்திரேட் வி.பி.ரவீந் திரன் மட்டும் அன்று ஒரே நாளில் 245 வழக்குகளை முடித்தார். இதுபோல சிறை வாசிகளுக்கான நீதிமன்றம் வெள்ளிதோறும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிறைவாசிகளுக்கான நீதிமன்றம் தொடர்ந்து நடத்தப்பட வில்லை. சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் ஏழைக் கைதிகளை விடுவிப்பதில் முனைப்பு காட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறுகுற்றக் கைதிகள் விடுதலை ஆக முடியா மல் உள்ளனர்.
இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீ.கண்ணதாசன் கூறியதாவது:
‘எல்லோருக்கும் நீதி’ என் பதை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 39 (ஏ) வலியுறுத்து கிறது. நியாயமான வழக்குகளை விரைவாக முடித்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 304-ன்படி, தேவையானவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 167 (3)-ன்படி 60 முதல் 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இலவச சட்ட உதவி மையத்துக்கு பதிவு மூப்பு அடிப்படையோடு, சமூக சேவையில் அக்கறையுள்ள வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு நியமித்தால், அனை வருக்கும் இலவச சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்யலாம். அவர்களுக்கு நியாயமான ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகள் இல்லாததாலும், குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய் யாததாலும் சிறு வழக்குகளுக்காக சிறையில் இருப்பவர்கள் குற் றத்தை ஒப்புக்கொண்டு விடுதலை ஆகமுடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறு வீ.கண்ணதாசன் கூறினார்.
920 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை
தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் சிறைகள், 6 மாவட்ட சிறைகள், 134 கிளைச் சிறைகள், இவை தவிர 18 முதல் 21 வயது வரையிலான குற்றவாளிகளுக்காக புதுக்கோட்டையில் போர்ஸ்டல் (Borstal) பள்ளி என்ற மத்திய சிறையும் உள்ளது.
தமிழகம் முழுவதும் 1,400 பெண் கைதிகள் உட்பட சுமார் 14 ஆயிரம் கைதிகள் சிறையில் உள்ளனர். இவர்களில், சிறு வழக்குகளுக்காக சென்னை புழல் சிறையில் உள்ள 384 பேர் உட்பட சுமார் 1,200 கைதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வெளிவரத் தயாராக இருந்தும் விடுதலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த வழக்குகளில், சென்னையில் 420 வழக்குகள் உட்பட தமிழகம் முழுவதும் 920 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago