கடைகளில் வேலைக்கு சேர்ந்து திருடும் பெண் சிக்கினார்

கடைகளில் வேலைக்கு சேர்ந்து பொருட்கள், பணத்தை திருடிச் சென்ற பெண் பிடிபட்டார்.

சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் அருண்குமார் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு இவரது கடையில் வேலைக்கு சேர்ந்த ஒரு பெண், அருண்குமார் கடை யில் இல்லாத நேரத்தில், கடை யில் இருந்த செல்போன்கள், பணத்தை திருடிக்கொண்டு தலை மறைவாகிவிட்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது.

இந்நிலையில் தண்டையார் பேட்டை காவல் நிலையம் அருகே வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் கடையை வைத்திருக்கும் முருகன் என்பவரின் கடைக்கு நேற்று முன்தினம் காலையில் ஒரு பெண் வேலை கேட்டு வந்தார். முருகனும் அருண்குமாரும் நண் பர்கள். அருண்குமாரின் கடையில் நடந்த சம்பவம் முருகனுக்கு தெரியும்.

எனவே அந்த பெண் மீது சந்தேகமடைந்த முருகன் வேலை கொடுப்பதாக கூறி கடையில் அந்த பெண்ணை உட்கார வைத்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் அவரை செல்போனில் புகைப்படம் எடுத்து, நண்பர் அருண்குமாருக்கு 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பினார். அதைப் பார்த்த அருண்குமார், ‘தனது கடையில் திருடிய பெண் இவர் தான்’ என்று கூறினார்.

உடனே உஷாரான முருகன், அந்த பெண்ணை கடைக்குள் ளேயே பிடித்து வைத்து, தண்டையார்பேட்டை போலீஸா ருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ராயபுரம் வீராசாமி தெருவை சேர்ந்த ஆனந்தி (23) என்பது தெரிந்தது.

இதேபோல பல கடை களில் அவர் கைவரிசை காட்டி யிருப்பதும் தெரியவந்தது. இப்படி திருடும் பொருட்களை பர்மா பஜாரில் உள்ள ஒரு கடையில் விற்றிருக்கிறார். கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தியிடம் இருந்து 2 செல்போன்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE