பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

2011 முதல் 2014 வரை 31 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பார்வை திறன் குறைபாடு கண்டறியப்பட்டு, இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வருடம், சென்னை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 371 பள்ளியைச் சேர்ந்த 57 ஆயிரத்து 541 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 539 பேருக்கு பார்வை குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 664 பேருக்கு ரூ.5 லட்சத்து 67 ஆயிரம் செலவில் இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 1875 மாணவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE