சாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை

சாதிமறுப்பு திருமணம் செய்துள்ள அனைவருக்கும் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட 2-வது மாநாடு, பெரிய பாளையத் தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முன்னணியின் மாநிலத் தலைவர் சம்பத், துணைத் தலை வர் மகேந்திரன், பொருளாளர் ஜெய ராமன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில், சாதி மறுப்பு திரு மணத்தை ஊக்குவிக்கும் வகை யில், சாதி மறுப்பு திருமணம் செய்துள்ள அனைவருக்கும் அரசு உதவித் தொகை வழங்கவேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு வடிவங்களில் தொடரும் தீண்டாமையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், 30 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டது. மாநாட்டையொட்டி கருத் தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE