ஏராளமான வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் சுருக்கெழுத்துக் கலையை அனைவரும் கற்க வேண்டும்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வலியுறுத்தல்

சுருக்கெழுத்துக் கலையை உருவாக்கிய சர் ஐசக் பிட்மேன் 203-வது பிறந்த நாள், சென்னை தி.நகரில் உள்ள ஸ்டெனோ கிராபர் சங்கத்தில் கொண்டாடப் பட்டது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதி காரியும், தமிழக அரசு வரு வாய்த்துறை அணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தவருமான டி.எஸ்.தர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கும் திறன் கொண்ட சுருக்கெழுத்துக் கலையை இளைஞர்கள் அனைவரும் கற்க வேண்டும்.

சுருக்கெழுத்துக் கலையை கற்றதால் எனக்கு கவனிக்கும் திறன், ஆங்கிலத்தில் பேசும் திறன் மேம்பாடு அடைந்தது. ஐஏஎஸ் தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடிந்தது” என்றார்.

பின்னர் அவர் சர் ஐசக் பிட்மேன் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். ஆபீஸ் ஆட்டோமேஷன் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி கீதாசரானந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண் டார். ஸ்டெனோகிராபர்கள் சங்க தலைவர் எஸ்.ஆர்.சிவசுப்பிரமணியம், முதல்வர் எஸ்.சேகர் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE