பைக்குகளை திருடி இணையதளம் மூலம் விற்பனை: 5 பேர் கைது

பைக்குகளை திருடி போலி ஆர்சி புத்தகம் தயாரித்து இணையதளம் மூலம் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் ராஜமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது 3 பைக்கு களில் வந்த 5 பேரை போலீஸார் வழிமறித்து விசாரித்தனர். அவர் கள் முன்னுக்கு பின் முரணாகப் பேசினர். இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் தீவிர மாக விசாரித்தனர். அப்போது அவர்கள் வந்த 3 மோட்டார் சைக்கிள்களில் ஒன்றை திருடிக் கொண்டு வந்தது தெரிந்தது. உடனே அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் கொளத்தூர் எம்.ஆர்.நகரை சேர்ந்த சூர்யா(27), வசந்த்ராஜ்(26), முகப்பேர் ரெட்டி பாளையத்தை சேர்ந்த யுகேஷ் குமார்(25), திருமங்கலத்தை சேர்ந்த ஜிலானி(32), ராஜமங் கலத்தை சேர்ந்த சுரேந்தர்(32) என்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியதாவது:

அவர்கள் 5 பேரும் சேர்ந்து பல பைக்குகளை திருடி விற்பனை செய்துள்ளனர். பைக்குகளை திருடியதும் அதன் நம்பர் பிளேட்டை மாற்றி விடுவார் கள். வண்டியில் சில அடையாளங் களை மட்டும் மாற்றி, கம்ப்யூட் டர் மூலம் போலியான ஆர்சி புத்தகத்தை தயார் செய்துவிடு வார்கள். பின்னர் பழைய பொருட் களை விற்பனை செய்யும் சில இணையதளங்கள் மூலம் அவற்றை விற்பனை செய்துள்ள னர். அவர்களிடம் இருந்து 10 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளோம். 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டோம்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE