ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் இளங்கோவனுடன் சந்திப்பு: ஒரு மணி நேரம் ஆலோசனை

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.

கடந்த நவம்பர் 1-ம் தேதி இளங் கோவன் தலைவராகப் பொறுப்பேற் றது முதல் அவருக்கும் ப. சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப் பினருமான கார்த்தி சிதம்பரம், இளங் கோவனை விமர்சித்து வருகிறார்.

இளங்கோவன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சிதம்பரம் ஆதரவாளர் கள் புறக்கணித்து வருகின்றனர். ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் வெளியேறியதால் காலியாக இருந்த மாவட்டங்களுக்கு இளங்கோவன் ஆதரவாளர்களே மாவட்டத் தலைவர் களாக நியமிக்கப்பட்டனர்.

மாநிலப் பொருளாளர் பதவியை கார்த்தி சிதம்பரம் எதிர்பார்த்த நிலை யில் இளங்கோவன் ஆதரவாளரான நாசே ராமச்சந்திரன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதனால் சிதம் பரம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், அவரது ஆதர வாளர்களான முன்னாள் எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரி, வள்ளல்பெருமான், மாநிலப் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா, தென் சென்னை மாவட் டத் தலைவர் கராத்தே தியாக ராஜன் உள்ளிட்ட 8 மாவட்டத் தலை வர்கள் சத்தியமூர்த்தி பவனில் இளங்கோவனை நேற்று சந்தித்துப் பேசினர். அவர்களுடன் இளங்கோ வன் சுமார் 1 மணி நேரம் ஆலோ சனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ப. சிதம்பரத்துக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. சில பிரச்சி னைகள் இருக்கலாம். அது எங்கள் குடும்பப் பிரச்சினை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க உறுதியேற்றுள்ளோம். வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பார்கள்’’ என்றார்.

இதுகுறித்து சிதம்பரம் ஆதர வாளர்களிடம் கேட்டபோது, ‘‘இளங்கோவனும் மற்ற சிலரும் ப.சிதம்பரம் குறித்து பகிரங்க மாக விமர்சித்தது குறித்து நேரடி யாக விளக்கம் கேட்பதற்கே சென் றோம். இனி அதுபோன்ற தவறுகள் நடக்காது. இணைந்து செயல்படு வோம் என இளங்கோவன் உறுதி அளித்தார்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE