மீனாகுமாரி குழு பரிந்துரையை நிராகரிக்க மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

மீன் வளங்கள் குறித்து மீனாகுமாரி குழு அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீனாகுமாரி குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை சார்பில் ஏப்ரல் 22-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி 13 கடலோர மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் நடத்த விருக்கும் பேரணிக்கு மதிமுக ஆதரவளிக்கிறது.

மீனாகுமாரி குழு பரிந்துரைகள் படி, கடலில் தனியாக பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், 12 கடல் மைல்கள் தூரத்துக்கு அப்பால் மீனவர்கள் செல்ல முடி யாது, 200 முதல் 500 அடி ஆழம் உள்ள ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமம் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பாரம்பரிய இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்து பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதர வாக இருக்கும் வகையில் அரசு கொண்டுவந்துள்ள ‘நீலப்புரட்சி’ கண்டனத்துக்குரியது. எனவே மீனாகுமாரி குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE