முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுக: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது கண்துடைப்பு மற்றும் உண்மையை மறைக்க நடக்கும் முயற்சி.

இவ்விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், "அம்மாவுக்கு அனைத்தும் தெரியும்" என்று முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்திருந்தார்.

மாநில அரசு நிர்வாகத்தையே வழிநடத்தும் ஒருவருக்கு இந்த குற்றம் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரியும் என்ற நிலையில், மாநில காவல்துறை எப்படி இதில் நியாயமான, நேர்மையான விசாரணையை நடத்த முடியும்?

ஆகவே, நேர்மையான அதிகாரியின் உயிர் பறித்த இந்த ஊழலில் தொடர்புடையை அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கு ஏதுவாக முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்" என்றார் மு.க.ஸ்டாலின்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE