விவசாயிடம் ரூ.50 ஆயிரம் பறித்த முதல்நிலை காவலர் சஸ்பெண்ட்

உத்திரமேரூரை அடுத்த வேட பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். விவசாயி. விவசாயம் செய்வதற்காக மது ராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், கூட்டுறவு வங்கியி லிருந்து கடந்த 1-ம் தேதி ரூ.1.98 லட்சம் கடனாகப் பெற்றார். இந்த பணத்தை இருசக்கர வாகனத் தில் வைத்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, படாளம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலரான முத்துகுமார், குமரவேலை மடக்கி சோதனை செய்துள்ளார். அதில் இருந்த பணத்தில் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக்கொண்டு இதை வெளியே கூறக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த குமரவேல் இதுதொடர்பாக செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜு ஜார்ஜிடம் புகார் அளித்தார். இதன்பேரில், செங்கல்பட்டு போலீஸார் நேற்று முன்தினம் முத்துகுமார் தங்கியுள்ள காவலர் குடியிருப்புக்குச் சென்று விசாரணை நடத்தி ரூ.48 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் சம்பவம் தொடர்பாக ஜார்ஜு ஜார்ஜ் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், முத்து குமாரை காவல் கண்காணிப்பா ளர் விஜயகுமார் நேற்று சஸ் பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்து, போலீஸ் வட்டாரங் கள் கூறியதாவது: துறைரீதியான நடவடிக்கையாக இந்த சஸ் பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர் பாக உரிய விசாரணை செய்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE