சென்னை விமான நிலையத்தில் 2.8 கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த திருச்சி துறையூரை சேர்ந்த அமீனா பீவி சிக்கந்தர் என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அந்த பெண் உள்ளாடைக்குள் 1 கிலோ 600 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப் பது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல துபாயில் இருந்து விமானத்தில் ஆந்திராவை சேர்ந்த ராமுடு என்பவர் தன்னுடைய செருப்பில் 350 கிராம் தங்கத்தையும், சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சேகர் மற்றும் பன்னீர்செல்வம் தங்களுடைய சூட்கேசில் தலா 300 கிராம் தங்கத்தையும் மற்றும் மலேசியாவில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த கண்ணன் என்பவர் ஆசனவாயில் 250 கிராம் தங்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களை எச்சரித்து அனுப்பினர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE