தமிழ்நாடு மின் நிதிக் கழகத்துக்கு பல்கலை. டெபாசிட் நிதியை மாற்ற வலியுறுத்தல்: மின் வாரியத்தின் கடன் சுமையை சமாளிக்க திட்டம்

மின்சார வாரியத்தின் கடன் சுமையை சமாளிக்க, பல்கலைக் கழகங்கள் வங்கிகளில் வைத்துள்ள நிதியை மின் நிதிக் கழகத்தில் (POWER FIN CORPORATION) முதலீடு செய்யும்படி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் தற்போது ரூ.70 ஆயிரம் கோடிக்கும் அதிக மான கடன் சுமையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. 2011-ம் ஆண்டுல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் மின் வாரியத்தின் கடன் ரூ.52 ஆயிரம் கோடி என தகவல் வெளியானது. அதன்பிறகு கூடுதல் கடன் வழங்க வங்கிகள் மறுத்து வந்தன. இத னால், வங்கிகளில் தமிழக அரசு நிறுவனங்கள் சேமிப்பாக வைத்திருக்கும் நிதியை மின் நிதிக் கழகத்தில் முதலீடு செய்யும்படி மின் வாரியம் கோரியது.

அதன்படி தொழில் துறை, அறநிலையத்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரி யம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட அரசு சார்ந்த அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மின்வாரியத்தின் கடன் ரூ.18 ஆயிரம் கோடி உயர்ந்து, ரூ.70 ஆயிரம் கோடியாக உள்ளது.

கோடைக்காலத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டி உள்ளதால் கடன் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கடன் சுமையை சமாளிக்க மீண்டும் பல்வேறு அரசு அமைப்புகளிடம் நிதி பெறும் முயற்சியில் மின்வாரி யம் இறங்கி உள்ளதாக கூறப் படுகிறது.

சமீபத்தில் நடந்த பல்கலைக் கழகங்களுக்கான நிதிக்குழு கூட்டத் தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, பல்கலைக்கழங்கங்கள் தனியார் மற்றும் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள தொகையை மின் நிதிக் கழகத்துக்கு மாற்றுமாறும், இதன்மூலம் அதிக வட்டி கிடைக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் மின் நிதிக்கழகத்தில் முதலீடு செய் துள்ளன. திறந்தநிலை பல்கலைக் கழகம் ஏற்கெனவே, ரூ.40.49 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், இந்தாண்டு மேலும் ரூ.40 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, தமிழகத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் தங்கள் நிதியை மின் நிதிக்கழகத்தில் முதலீடு செய்யும்.

இதுகுறித்து மின்வாரிய நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்துக்கு ரூ.70 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கப்படும். அதில் ரூ. 8 ஆயிரம் கோடி திருப்பி செலுத்தப்படுகிறது. நாங்கள் தற்போது வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதில்லை. ஹட்கோ, நபார்டு, மின் நிதிக்கழகம் உள்ளிட்டவற்றில் இருந்துதான் கடன் பெறுகிறோம். மின் நிதிக்கழகத்தில் 11 சதவீத வட்டியில் கடன் பெறுகிறோம். வங்கிகளில் வட்டி 13 சதவீதம் அளவுக்கு உள்ளது. தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால் கடன் பெறப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE