திருவள்ளூர், காஞ்சியில் சாலை மறியல்: சத்துணவு ஊழியர் 368 பேர் கைது

திருவள்ளூர், காஞ்சியில் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியு றுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 368 பேரை, போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குவது மற்றும் இடைக்கால நிவாரணமாக சத்துணவு அமைப் பாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம், சமையலருக்கு ரூ. 12 ஆயிரம் மற்றும் உதவியாளருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

குழந்தைகள் உணவுக்கான செலவினத் தொகையை ரூ. 5 ஆக உயர்த்தி வழங்குவது மற்றும் சத்துணவு துறையில் காலியாக 30 ஆயிரம் பணியிடங் களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசிடம் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தின் ஒருபகுதியாக சத்துணவு ஊழியர் கள் நேற்று சிறைநிரப்பும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதில், காஞ்சிபுரம் காந்திசாலையில் உள்ள பெரியார் தூண் அருகே சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 341 நபர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருவள்ளூரில் 27 பேர் கைது

திருவள்ளூர், ஜெ.என். சாலையில் நேற்று காலை சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் சுந்தரம்மாள், மாவட்ட செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர் இந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற் றனர்.

இந்த சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 27 பேரை திருவள்ளூர் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE