மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு தமிழன் உயிருக்கு இல்லை: சீமான் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

மரக்கட்டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

திருப்பூரில் நேற்று கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத் துவ முகாமை தொடங்கிவைத்த அவர், பின்னர் நிருபர்களிடம் கூறிய தாவது: மே 24-ல் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு திருச்சி யில் நடைபெற உள்ளது.

நம் மண்ணில் நாம் தமிழர்களாக இல்லை. இங்கிலாந்து நாட்டின் ஒரு மாநிலம் போல்தான் தமிழ்நாடு உள்ளது. அப்படிதான் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் உள்ளது. நம்முடைய பாரம்பரியத்தை வேளாண்மை தொடங்கி, அனைத்திலும் மீட்டெ டுக்க வேண்டிய தேவை உள்ளது.

இலங்கையில் தமிழர்களை சிங்களர்கள் சுடுகிறார்கள்; கர்நாடகம், கேரளத்தில் அடிக்கி றார்கள்; ஆந்திராவில் சுட்டுக்கொல் கிறார்கள். இதை, அந்த மாநிலத்தின் நீதிமன்றம் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர் பாக ஆந்திர அரசு வருத்தம் தெரி விக்காமலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப் பதும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், சம்பந்தப் பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், ஆந்திர அரசு மெளனம் காப்பது மனிதநேயமற்ற செயல். மரக்கட் டைக்கு இருக்கும் மதிப்பு, இந்த மண்ணில் தமிழன் உயிருக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE