தகுதியான முதியோர் யாருக்கும் உதவித் தொகை மறுக்கப்படாது

தகுதியான முதியோர் யாருக்கும் உதவித் தொகை மறுக்கப்படாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

முதியோர் உதவித் தொகைக்காக 2010-11-ம் ஆண்டில் ரூ.1,208 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உதவித் தொகையை ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் 2015-16 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வருவாய் ஈட்ட வழியில்லாத ஏழை முதியவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. சில இடங்களில் வசதியானவர்களும் இறந்தவர்கள் பெயரிலும் உதவித் தொகை பெறுகின்றனர். அப்படிப்பட்ட நபர்களை கண்டு பிடித்து நீக்கும்போது ஒரு சில தகுதியான நபர்கள் நீக்கப் பட்டிருக்கலாம்.

முதியோர் உதவித் தொகை திட்டத்தில் புதிய நபர்களை சேர்க்கவோ, நீக்கப்பட்ட அல்லது விடுபட்ட பெயரை சேர்க்கவோ முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தகுதியான எவருக்கும் முதியோர் உதவித் தொகை மறுக்கப்படாது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்