இல்லம்தோறும் கழிவறை அமைக்கும் திட்டம்: ஊக்குவிக்கும் குழுக்களுக்கு ஊக்கத்தொகை

By செய்திப்பிரிவு

இல்லம்தோறும் கழிவறை அமைக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவிக்கும் பணியில் ஈடுபடும் குழுவினருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது. அதன்படி அமைக்கப்படும் ஒவ்வொரு கழிவறைக்கும் தலா ரூ.300 ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இல்லங்கள் தோறும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 57,500 கழிவறைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இல்லங்களில் கழிவறை கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில், தகுதி வாய்ந்த பயனாளிக்கு அரசு சார்பில் ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிவறை அமைக்கவும், புதிதாக கட்டப்பட்ட கழிவறைகளை மக்கள் பயன்படுத்துவதை உறுதி செய் யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’ மற்றும் ‘ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பினர்’ ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப் புணர்வு பணியில் ஈடுபடும் குழு வினரை ஊக்கப்படுத்தவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இல்லங் கள்தோறும் அமைக்கப்படும் ஒவ்வொரு கழிவறைக்காகவும் தலா ரூ.300 ஊக்கத் தொகையாக குழுவினருக்கு வழங்கப்பட உள்ளது.

தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கான விண்ணப்பங்கள் கிராம ஊராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்படும்.

2 தவணையில் தொகை

இந்த திட்டப்பணிகள் அனைத்தும் கிராம ஊராட்சி நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. கழிவறை கட்டுவதற்கான மானியத்தொகை 2 தவணைகளாக வழங்கப்படும். கழிவறையின் அடித்தள பணிகள் முடிந்த பிறகு முதல் தவணையும், முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு 2-வது தவணையும் வழங்கப்படும்.

3 மாதகால அவகாசத்துக்குள் கழிவறை கட்டப்பட வேண்டும். திட்டத்தை சிறப்பாக செயல்படுத் தும் சமூகம் சார்ந்த அமைப்பு களுக்கும், ஊராட்சி மற்றும் சிறந்த களப்பணியாளர்களுக்கும் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE