மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பரவலாக மழை

காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்துள்ளது. எனினும், வெயில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தா னில் 6 செ.மீ., திண்டுக்கல் மாவட் டம் நத்தம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி ஆகிய இடங்களில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மதுரை மாவட்டம் பேரையூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. அது தவிர திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, அரியலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

வேலூரில் 102.2 டிகிரி, தருமபுரி, திருச்சி மற்றும் சேலத்தில் 100.4 டிகிரி, திருப்பத்தூரில் 98.6 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

கடந்த காலங்களில் ஏப்ரல் மாதத்தில் பொதுவாக 104 அல்லது 105 டிகிரி வெயில்தான் அதிகபட்ச அளவாக பதிவாகியிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயில் 105 டிகிரியை தொட்டுவிட்டதால், ஏப்ரல் மாதத் தில் வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE