ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்கு மாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சிப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலை மையில் நடந்த இக்கூட்டத்தில், துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குநர் கே.பாஸ்கரன், கூடுதல் இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (தாய்), சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்பு உட்பட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். அனைத்து திட்டப் பணிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், முதல்வரால் சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக் கப்பட்ட அறிவிப்புகள் உட்பட அனைத்து அறிவிப்புகளின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டப் பணி களையும் விரைவாக செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி ஆலோசனை வழங்கினார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE