9 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகள் விசாரணை: ஒரே நாளில் 1,100 வழக்குகள் விசாரணை

By டி.செல்வகுமார்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் நீதிமன்றத்தில் (லோக்-அதாலத்) குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. வரும் 11-ம் தேதி சென்னையில் மட்டும் 1,100 வழக்குகளை விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றத்தில் கம்பெனி வழக்குகள், வங்கி விவகாரம் போன்ற பல்வேறு வழக்குகள் சமரச அடிப்படை யில் விசாரித்து தீர்த்து வைக்கப் படுகின்றன. அதனால், மக்கள் நீதிமன்றத்தை நாடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரிக்கிறது. 2006-ம் ஆண்டு வரை மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகளில் ஜீவனாம்சம் கோரும் வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட்டன.

இந்த வழக்குகளில், மக்கள் நீதிமன்றம் விவாகரத்து வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு குடும்ப நல வழக்குகள் எதையும் மக்கள் நீதிமன்றம் விசாரிக்கவில்லை. இந்த நிலையில், நாடு முழு வதும் ஒருநாள் (ஏப்ரல் 11) தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்துவது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், அன்றைய தினம் குடும்ப நலவழக்குகள் மற்றும் தொழிலாளர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.

உடனே, 2006-ம் ஆண்டுக் குப் பிறகு மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படவில்லையே, இப் போது அந்த வழக்குகளையும் தேசிய லோக்-அதாலத்தில் விசாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளதே என்று தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விவரம் கேட்டு பெறப்பட்டது. அதற்கு, குடும்ப நல வழக்குகளில் மக்கள் நீதிமன்றம் விவாகரத்து வழங்கக்கூடாது என்றுதான் உத்தரவிடப்பட்டுள்ளது. சேர்ந்து வாழ விரும்பும் தம்பதிகளை சமரச அடிப்படையில் சேர்த்து வைக்கக்கூடாது என்று சொல்ல வில்லை என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது.

அதற்கு முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு வளாகத்தில் குடும்ப நல வழக்குகளில் முதல்கட்ட சமரச பேச்சுவார்த்தை (Pre Negotiation) நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6-ம் தேதி 104 தம்பதி அழைக்கப்பட்டதில் 92 பேரும், ஏப்ரல் 7-ம் தேதி 111 தம்பதி அழைக்கப்பட்டதில் 97 பேரும், நேற்று 75 தம்பதி அழைக்கப்பட்டதில் 60 பேரும் ஆஜராகி முதல்கட்ட சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் டீக்கா ராமன் கூறுகையில், “சனிக்கிழமை நடை பெறும் மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப உறவுகளைப் பாதுகாப்ப தற்காக சென்னையில் மட்டும் 1,100 குடும்ப நல வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.

அப்போது, 800 தம்பதியர் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்