சிபிசிஐடி அமைப்பை பலப்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சிபிசிஐடி காவல் அமைப்பை பலப்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை கண்டுபிடிப்பதில் திறமை, பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்யவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் ராஜேஷ் காலனியை சேர்ந்த எபனேசர் பால், ஓய்வுபெற்ற வருமான வரித் துறை அதிகாரி. இவரது மனைவி ஷீலா. கடந்த 6.4.2005-ல் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருவரும் கொலை செய்யப்பட்டனர். வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு 2006-ல் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகும் குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப்படாத தால், விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, எபனேசர் பால் மகள் மேரி ஒலியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நாகமுத்து முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி. அன்பு நேரில் ஆஜரானார். அன்பு கூறும்போது, 5 ஆண்டு களுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்குகளில் குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியாததால் எபனேசர் பால் கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் முடிக்கப் பட்டன. எபனேசர்பால் - ஷீலா கொலை வழக்கை தனிப்படை அமைத்து மீண்டும் விசாரிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: உள்ளூர் போலீஸார் சரியாக விசாரிக்காத நிலையில்தான், சிபிசிஐடிக்கு விசா ரணை மாற்றப்படுகிறது. சிபிசிஐடி போலீஸார் சரியாக விசாரணை நடத்தாத நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

சிபிசிஐடி போலீஸார் குற்ற வாளிகளை எப்படியும் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அப்படிப்பட்ட சிபிசிஐடி போலீ ஸார், குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை என்று தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றுவது தமிழக போலீஸாருக்கு நல்லதல்ல. எந்த வழக்காக இருந்தாலும் குற்றவாளி களைக் கண்டுபிடிக்கும் வகையில் சிபிசிஐடி போலீஸ் அமைப்பை பலப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி குற்றங்களைக் கண்டு பிடிப்பதில் திறமை, பயிற்சி பெற்ற வர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரை எஸ்.பி. அன்பு தலைமையில் தனிப் படை அமைத்து வழக்கை மீண் டும் விசாரிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. பெற்றோர் கொலை செய்யப்பட்டதால் பாதிப் படைந்துள்ள மனுதாரர் மற்றும் அவரது சகோதரருக்கு 3 மாதங் களில், தமிழக பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக காவல்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE