வெவ்வேறு இடங்களில் விபத்து: ஒரே நாளில் 13 பேர் பலி - குழந்தைகள் உட்பட 15 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று சேலம், திருச்செங்கோடு, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 13 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் அருகே பஸ் - வேன் மோதி 4 பேர் பலி

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள என்.பழக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தை யன். பெரம்பலூர் மாவட்டம் எழும்பூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு பேரக் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க, குடும்பத்தினருடன் இரண்டு வேன்களில் புறப்பட்டுச் சென்றார்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இரண்டு வேன்கள், சேலம் மாவட்டம் வாழப்பாடி பைபாஸ் ரோட்டில் கிழக்குக்காடு மேம் பாலத்தில் சென்றபோது, டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்னையில் இருந்து சத்திய மங்கலம் நோக்கி வந்த தனியார் பஸ் மீது வேன் மோதியது. இதில் என்.பழக்காரனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மனைவி சித்ரா (35), சிவபெருமாள் மகன் பிரபு (16), பழனியப்பன் மகன் செல்வகுமார் (19) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குக் கொண்டு வரும் வழியில் பழனியப்பனின் இன்னொரு மகன் லட்சுமணன் (15) இறந்தார்.

இந்தக் கோர விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட பெரியம் மாள், சண்முகம், தர்மலிங்கம் முத்து, சரஸ்வதி, லதா, ராமன், கார்த்திக்கேயன், பழனியம்மாள் என 10 பேர் பலத்த காயம் அடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ்ஸில் இருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் காயம் எதுவுமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே 3 மாணவர்கள் பலி

ஈரோட்டில் இருந்து நேற்று காலை திருச்செங்கோட்டுக்கு சென்ற தனியார் பஸ், திருச்செங் கோடு அடுத்த ஐந்துபனை என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது, சாலையோரம் நின்ற ஆட்டோ மீது மோதியது. இதில், படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த திருச்செங்கோடு தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் படித்து வரும் தமிழ்செல்வன்(18), சரவண குமார்(18), பிரேம்குமார்(18), பிரபா கரன்(18) ஆகியோர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிரேம்குமார் மற்றும் சரவண குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஈரோடு தனியார் மருத்துவமனையில் பிரபாகரனும், சரவணன் என்பவரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே 6 பேர் பலி

சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் இருந்து கவுதம், விக்னேஸ் வரன், சபரி, ஷேக், அஜய்ரத்னம் உட்பட ஏழு பேர் ராமேசுவரத்துக்கு காரில் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

தொண்டி அடுத்துள்ள திருப் பாலைக்குடி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே மணக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த ஜீப் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் வந்த சபரிநாதன் (21), கவுதம் (20) விக்னேஷ்வரன் (18) ஜீப்பில் வந்த மணிமுத்து (37 ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் அடைந்தன.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தவர்களை ராமநாத புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில் காரில் வந்த மேலும் இரண்டு பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

அஜய்ரத்னம், ஷேக் ஆகியோர் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையிலும், ஜீப்பில் வந்த அன்பரசன் தீவிர சிகிச் சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE