அதிமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி: சர்ச்சையில் சிக்கியவர்களை விடுவிக்க ஜெ. உத்தரவு

By கி.கணேஷ்

அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கெனவே பதவியில் உள்ளவர்களில் சர்ச்சை களில் சிக்கியவர்களைத் தவிர மற் றவர்களை அதே பதவியில் நிய மிக்க கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கடலூர், ஈரோடு, திருப் பூர், கோவை, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை, மதுரை, தேனி, திண்டுக் கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.

பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு 7 முதல் 12 பேர் வரை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நெல்லை மாநகர் மற்றும் புறநகரில் தற்போதைய மாவட்டச் செயலாளர்கள் முத்துக்கருப்பன், முருகையா பாண்டியன் உட்பட 12 பேரும் தூத்துக்குடியில் தற் போதைய மாவட்டச் செயலாள ரான அமைச்சர் சண்முகநாதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கள் ஆறுமுக நயினார், ஹென்றி, செல்லபாண்டியன் உள்ளிட்ட பலரும் மனு கொடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பலர் மனு அளித்துள்ளனர். இதுபோல, துணைச் செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் பதவிக்கும் பலர் போட்டியிட மனுக்களை அளித்துள்ளனர். மனு அளித்தவர் கள் பற்றிய விவரங்களை தேர்தல் பொறுப்பாளர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் அளித்து வருகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் நாளையுடன் இந்தத் தேர்தல் முடிய உள்ள நிலையில் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

வழக்கமாக ஒரு பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் மட்டுமே மனு அளிக்க அனுமதிக்கப்படு வார். அப்போதே தலைமையின் பரிந்துரை யார் என்பது தெரிந்து விடும். ஆனால், தற்போது மாவட்டச் செயலாளர் பதவிக்கு 6, 7 பேர் போட்டியிடுகின்றனர். ஏற் கெனவே பதவியில் உள்ள நிர்வாகி களில் சர்ச்சைகளில் சிக்கியவர் களை மட்டும் நீக்கிவிட்டு அங்கு புதியவர்களை தேர்வு செய் யவும், மற்ற இடங்களில் பழைய நிர்வாகிகளையே நியமிக்கவும் பொதுச் செயலாளர் உத்தர விட்டுள்ளதாக தெரிகிறது.

கட்சித் தலைமையின் இந்த உத்தரவு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE