திருத்தணி முருகனுக்கு ஒரு லட்சம் லிட்டர் பாலாபிஷேகம்

By செய்திப்பிரிவு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று ஒரு லட்சம் லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு பால், பன்னீர், விபூதி,இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடங்களுடன் கோயிலுக்கு வந்தனர். சென்னையிலிருந்து திருத்தணிக்கு பாத யாத்திரையாக வந்த திரளான பக்தர்கள், பால் காவடி, சர்க்கரை காவடி, மயில் காவடிகள் எடுத்து வந்தனர்.

அதன் பிறகு பகல் 12 மணியளவில், காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகருக்கு சர்க்கரை, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, பக்தர்கள் சுப்ரமணிய சுவாமிக்கு காணிக்கையாக கொண்டு வந்த ஒரு லட்சம் லிட்டர் பால் மூலம் பாலாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுப்ரமணிய சுவாமியை ஆயிரக்கணக் கான பக்தர்கள் வணங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE