தேமுதிக எம்எல்ஏக்கள் விடுதி அறைக்கு பூட்டு: சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் நடவடிக்கை

By கி.கணேஷ்

சட்டப்பேரவையில் இருந்து சஸ் பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக உறுப்பினர்களுக்கு எம்எல்ஏக்கள் விடுதியில் வழங்கப்பட்ட அறைகள் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டன. அவர்களின் தொகுதி அலுவல கங்களையும் மூடும் நடவடிக் கையில் சட்டப்பேரவை செயலகம் ஈடுபட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடை பெற்றது. அப்போது தேமுதிக துணைத்தலைவர் மோகன்ராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக தெரிவித்த சில கருத்துகள் காரணமாக பேரவை யில் கடும் அமளி ஏற்பட்டது.

இதனால், தேமுதிக எம்எல்ஏக் கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சட்டப்பேரவை உரிமைக் குழுவுக்கு அனுப் பப்பட்டது. தொடர்ந்து, தேமுதிக எம்எல்ஏக்கள் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 6 பேரும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக உரிமைக்குழுவின் அறிக்கையை, கடந்த மார்ச் 31- ம் தேதி உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து அவை உரி மையை மீறிய, மோகன்ராஜ் உட்பட 6 தேமுதிக எம்எல்ஏக் களையும் அடுத்த கூட்டத்தொடர் துவங்கி, 10 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி வைத்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். மேலும், இக் காலத்தில், சட்டப்பேரவை உறுப்பினராக ஊதியம் மற்றும் எந்தவித பிற ஆதாயங்களையும் பெற முடியாது என்றும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து, பேரவைத் தலைவரின் உத்தரவை சட்டப் பேரவை செயலகம் செயல்படுத்த தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள எம்எல்ஏக் கள் விடுதி ‘டி’ பிளாக்கில், 5, 6, 8-வது தளங்களில் உள்ள 6 தேமுதிக உறுப் பினர்களின் அறைகளை நேற்று பூட்டி ‘சீல்’வைத்தனர்.

மேலும் அந்த எம்எல்ஏக் களின் தொகுதிகளில் உள்ள அவர்கள் அலுவலகங்களையும் மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE