கிட்ட மற்றும் தூரப்பார்வை குறைபாடு: அகர்வால் மருத்துவமனையில் புதிய லேசர் சிகிச்சை அறிமுகம் - கண்ணாடி, லென்ஸ் அணிய வேண்டாம்

By செய்திப்பிரிவு

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் கிட்ட மற்றும் தூரப்பார்வை குறைபாட்டை சரி செய்வதற்கு ‘ஸ்மைல்’ என்ற புதிய லேசர் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:

இந்த கண் மருத்துவமனையில் ‘ஸ்மைல்’ என்ற புதிய லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் கிட்ட மற்றும் தூரப்பார்வை குறைபாடு சரிசெய்யப்படுகிறது. இதற்காக ரூ.4 கோடி செலவில் புதிய லேசர் தொழில்நுட்ப கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் 5 முதல் 10 நிமிடங்களில் கிட்ட மற்றும் தூரப்பார்வை குறைபாட்டை மிகத் துல்லியமாக சரிசெய்துவிட முடியும்.

சிகிச்சை முடிந்த உடன் வீட்டுக்கு சென்றுவிடலாம். கண் கருவிழியில் மிகச்சிறிய அளவிலான துளையின் மூலம் குறைபாடு சரிசெய்யப்படுவதால், பெரிய அளவிலான காயங்கள் இருக்காது. தையல் போட வேண்டாம். ஸ்மைல் லேசர் சிகிச்சை கத்தி இன்றி செய்யப்படும் உலகின் ஒரே லேசர் அறுவை சிகிச்சையாகும்.

கிட்ட மற்றும் தூரப்பார்வை குறைபாடுள்ளவர்கள் இந்த புதிய லேசர் சிகிச்சை செய்து கொண்டால், கண்ணாடி மற்றும் லென்ஸ் அணியத் தேவை யில்லை. இந்த புதிய லேசர் சிகிச்சைக்கு சுமார் ரூ.50 ஆயிரம் செலவாகும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கடந்த 2 வாரங்களில் 4 வயது குழந்தை உட்பட 45 பேரின் பார்வை குறைபாடு சரிசெய்யப்பட்டுள் ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயக்குநர் அஸ்வின் அகர்வால், கருவிழி சிகிச்சைத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் சூசன் ஜேக்கப், மருத்துவ இயக்குநர் டாக்டர் ஸ்மீதா ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்