தலைமை தேர்தல் அதிகாரியின் பேஸ்புக் வலைத்தளப் பக்கம் முடங்கிக் கிடப்பதால் ஏமாற்றம்

சமூகவலைத்தள உபயோகிப் பாளர்களிடையே பிரபலமாக விளங்கிய, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பேஸ்புக் பக்கம், கடந்த சில மாதங்களாக முடங்கிக்கிடக்கிறது.

தேர்தல் நடவடிக்கைகளில் இளம் வயதினரை அதிக எண்ணிக் கையில் ஈடுபடுத்தும் நோக்கத் துடன், அவர்களைக் கவரும் வகை யில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தினரால், கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில், Ceo Tamilnadu என்னும் பிரத்யேக பக்கம் (http://www.facebook.com/ceo.tamilnadu.1) தொடங்கப்பட்டது. அது மிகவும் பிரபலமாக விளங்கிவந்தது.

வாக்காளர் அட்டை பெறுவது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான தங்களது சந்தேகங்களை அந்த பேஸ்புக் பக்கத்தில் ஏராளமானோர் பதிவு செய்துவந்தனர். அவற்றிற்கு அப் போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரே உடனுக் குடன் பதிலளித்துவந்தார். அவர் கடந்த நவம்பரில் பணியிடமாற்றம் பெற்று சென்ற பிறகு, அந்த பக்கம் செயல்படாமல் உள்ளது. இத னால் சமூகவலைத்தள உபயோ கிப்பாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்ஸேனா விடம் கேட்டபோது, “தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் பேஸ்புக் பக்கம், முன்பிருந்ததைப் போல துடிப்புடன் செயல்படுவதை விரைவில் காணலாம். அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள் ளன” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE